தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் 100-வது திரைப்படத்தை இயக்குநர் ரா.கார்த்திக் இயக்க இருக்கிறார். அன்னபூர்ணா ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகும் இத்திரைப்படத்தில், அதிநவீன டி-ஏஜிங் தொழில்நுட்பம் மூலம் நாகார்ஜுனா 25 முதல் 60 வயது வரையிலான பல்வேறு தோற்றங்களில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இப்படத்தில் சுமார் 28 ஆண்டுகளுக்கு பிறகு நாகார்ஜுனாவுக்கு வில்லியாக நடிகை தபு நடிக்கவிருப்பதாக வெளியாகி இருக்கும் தகவல், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகார்ஜுனாவின் 100-வது படத்தில் வில்லியாக நடிக்கும் நடிகை தபு?
