Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

வரி பாக்கி புகாரில் ஜெ.வின் ஹைதராபாத் இல்லம் முடக்கம்

ஹைதராபாத்: ரூ.82 லட்சம் வரி பாக்கி புகாரில் ஜெயலலிதாவின் ஹைதராபாத் இல்லத்தை ஹைதராபாத் மாநகராட்சி நிர்வாகம் முடக்கியது. ஹைதராபாத் ஸ்ரீநகர் காலனியில் 4 மாடிகளுடன் உள்ள வீட்டிற்கு சீல் வைத்து மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டு முதல் சொத்து வரி கட்டவில்லை என புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் உறவினர்களுக்கு கடந்த பிப்ரவரி மாதமே நோட்டீஸ் அனுப்பியும் பதில் இல்லை என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஹைதராபாத்தில் உள்ள வீடு ஜெயலலிதா இருந்தபோது அலுவலகமாக பயன்படுத்தப்பட்டு வந்தது.

error: Content is protected !!