Skip to content
Home » அலப்பறை கிளப்பும் ‘ஜெயிலர்’… 6 நாளில் 400 கோடி வசூல் சாதனை…

அலப்பறை கிளப்பும் ‘ஜெயிலர்’… 6 நாளில் 400 கோடி வசூல் சாதனை…

  • by Senthil

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மாஸ் ஹிட் திரைப்படங்களில் ஒன்றாக மாறிவிட்டது ஜெயிலர். கடந்த ஆகஸ்ட் 20-ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து மோகன்லால், ஜாக்கி ஷெராஃப், சிவ ராஜ்குமார், சுனில், தமன்னா, யோகிபாபு, விநாயகன், வசந்த் ரவி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

jailer

ஆக்ஷன் அதிரடியில் உருவாகியுள்ள இந்த படத்தை பெரிய பட்ஜெட்டில் சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. ஜெயில் கதைக்களம் கொண்ட இந்த படத்தில் முத்துவேல் பாண்டியன் என்ற ஓய்வுபெற்ற ஜெயிலர் கதாபாத்திரத்தில் மிரட்டலாக நடித்துள்ளார். நேர்மையான போலீஸ் அதிகாரியாக இருக்கும் தனது மகனை வில்லன் கடத்தும் நிலையில் எப்படி முத்துவேல் பாண்டியன் காப்பாற்றுகிறார் என்பதுதான் படத்தின் கதை.

‌இந்த படம் உலகம் முழுவதும் 6வது நாளில் 400 கோடியை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதல் நாளில் 96 கோடியும், இரண்டாவது நாளில் 56 கோடியும், மூன்றாவது நாளில் 69 கோடியும் வசூலித்துள்ளது‌. இந்நிலையில் இந்த படம் உலக முழுவதும் 400 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!