Skip to content
Home » துபாயில் ”ஜெயிலர்” படத்தை குடும்பத்துடன் பார்த்த ரொனால்டோ…

துபாயில் ”ஜெயிலர்” படத்தை குடும்பத்துடன் பார்த்த ரொனால்டோ…

  • by Senthil

அண்ணாத்த படத்திற்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 10ம் தேதி வெளியான திரைப்படம் ஜெயிலர்.  படத்தில் ரஜினியுடன் தமன்னா, மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராப் என இந்திய சினிமாவின் முன்னணி நடிகர்கள் நடித்துள்ளார்கள். அனிருத் இசையமைப்பில் படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் தான். வெளியான முதல் நாளே படம் உலகம் முழுவதும் ரூ. 100 கோடியை நெருங்கி இருந்தது, அடுத்தடுத்த நாளும் நல்ல வேட்டை நடத்துகிறது.  எல்லா இடங்களிலும் தரமான வசூல் வேட்டை நடத்தி வரும் ஜெயிலர் படம் இதுவரை மொத்தமாக உலகம் முழுவதும் ரூ. 413 கோடி வரை வசூலித்துள்ளதாம். படம் விரைவிலேயே ரூ. 500 கோடியை எட்டிவிடும் என்கின்றனர். இந்தநிலையில் ரஜினியின் ரசிகரான கால்பந்து அணியின் தலைவர் ரொனால்டோ தனது குடும்பத்தாருடன் வந்து துபாயில் ஜெயிலர் படத்தை பார்த்து கண்டுகளித்தார்.  அதன் போட்டோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஜெயிலர் படத்தை உலக அளவில் ரசிகர்கள் பார்த்து கொண்டாடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!