Skip to content
Home » ரஜினியிடம் சான்ஸ் கேட்டிருப்பார் ஓபிஎஸ்.. ஜெயக்குமார் கிண்டல்

ரஜினியிடம் சான்ஸ் கேட்டிருப்பார் ஓபிஎஸ்.. ஜெயக்குமார் கிண்டல்

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓ.பன்னீர்செல்வம் புரட்சிப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளார்.. காஞ்சிபுரத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட அந்த புரட்சிப் பயணத்தின் ஒரு பகுதியாக  பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் காஞ்சிபுரத்தில் நேற்று மதியம் தொடர்ந்து மழை பெய்ததால் ஓபிஎஸ் பொதுக்கூட்டம் ரத்து செய்யப்பட்டது… முன்னதாக நடிகர் ரஜினிகாந்தை போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்தில் ஒபிஎஸ் சந்தித்து பேசினார்.. இந்த சந்திப்பில் அரசியல் இல்லை என்று ரஜினி தரப்பில் கூறப்பட்டாலும் ஓபிஎஸ் தரப்பினர் பல்வேறு யூகங்களை கிளப்பி வருகின்றனர். இதற்கிடையே, திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் ரஜினி – ஓபிஎஸ் சந்திப்பு குறித்து நிருபர்கள் கேட்டனர். அதற்கு அவர்  “ஓபிஎஸ் – ரஜினி சந்திப்பு எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. ரஜினியின் அடுத்த படத்தில் குணச்சித்திர வேடம் கேட்பதற்காக ஓபிஎஸ் சந்தித்திருப்பார் என கிண்டலாக குறிப்பிட்டார் ஜெயக்குமார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!