கரூரில் பொதுமக்களிடம் தங்க நகைகளையும், பல லட்ச ரூபாய் பணத்தையும் பெற்று ஏமாற்றிவிட்டு தலைமறைவாக இருந்த நகைக்கடை உரிமையாளரை கைது செய்து கடையில் உள்ள பொருட்களை பறிமுதல் செய்த போலீசார்.
கரூர், ஜவகர் பஜார் பகுதியில் கைராசி ஜூவல்லர்ஸ் என்ற தனியார் நகைக்கடை செயல்பட்டு வந்தது. திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தரை பூர்வீகமாகக் கொண்ட கந்தசாமி என்பவர் இந்த

நகைக்கடையை நடத்தி வந்துள்ளார். கரூரில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நகைக்கடை செயல்பட்டு வந்துள்ளது.
கரூர் நகரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் இந்த நகைக்கடையில் தங்களது பழைய நகைகளை புதிய நகைகளாக மாற்றி தருவதற்கு கொடுத்துள்ளனர். அதேபோல் பலர் நகைகள் செய்வதற்கு பல லட்ச ரூபாய் பணமும் கொடுத்துள்ளனர். மேலும், நகை தவணை சீட்டுகளுக்கும் பொதுமக்கள் பலர் முதலீடு செய்துள்ளனர்.
இந்த நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கந்தசாமி நகை கடையை பூட்டிவிட்டு தலைமறைவாகி உள்ளார். இதையடுத்து தங்க நகைகளையும், பணத்தையும் முதலீடு செய்த பொதுமக்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் அடிப்படையில் கந்தசாமி மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை தேடிவந்தனர்.
நடவடிக்கை இல்லாததால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் பின்னர் போலீசார் பேச்சுவார்த்தையின் அடிப்படையில் கலைந்து சென்றனர்.
இந்த நிலையில் போலீசார் நகைக்கடை உரிமையாளர் கந்தசாமியை கைது செய்து நகர காவல் நிலையத்தில் விசாரணை மேற்கொண்டு கடையின் சாவியை பெற்றுக் கொண்டு கடைக்கு சென்ற காவலர்கள் உள்ளே இருந்த நகை எடை இயந்திரம், பணம் என்னும் இயந்திரம், உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்துள்ளனர். இதனை கேள்விப்பட்ட பாதிக்கப்பட்ட பொதுமக்கள் காவல் நிலையம் முன்பு குவிந்துள்ளதால் பரபரப்பு. விசாரணை முடிந்து இரவு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைக்க உள்ளனர். மேலும் நகை கடையில் பணம் மற்றும் நகை இதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

