Skip to content

டாக்டர் வீட்டில் நகை திருட்டு… குடும்ப தகராறு… இளம்பெண் தற்கொலை..திருச்சி க்ரைம்

  • by Authour

திருச்சி விமான நிலையத்தில் ரூ.49 லட்சம் கையாடல்

திருச்சி விமான நிலையத்தில் இருந்து விமானங்களில் அதிக அளவிலான சுமைகளை எடுத்துச் செல்லும் பயணிகளிடம் அந்த சுமைக்கான தொகையை ரொக்கமாக வசூலிப்பது வழக்கம். இதனை வசூல் செய்யும் பணியை தனி யார் நிறுவன ஒப்பந்த
பணியாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். இந்தநிலையில் ரூ.3.8 லட்சம் மோசடி செய்யப்பட்டதாக தெரியவந்தது. இந்தநிலையில் சந்தேகத்தின் பேரில் பெண் பணியாளர் ஒருவரை பிடித்து விமான நிறுவனத்தின் விஜிலென்ஸ் பிரிவினர் கடந்த மூன்று நாட்களாக விசாரணை நடத்தி வந்தனர். இந்த விசாரணையில் பல்வேறு திவிக்கிடும் தகவல்கள் வெளிவந்ததாக தெரிய வருகிறது. இந்த சம்பவத்தில் விமான நிறுவனத்தில் சுமார் ரூ. 49 லட்சம் கையாடல் செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிய வருகிறது. மேலும் இந்த விசாரணையில் ரொக்கம் கையாடல் செய்வதற்கு மூன்று அதிகாரிகள் உடந்தையாக இருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது இந்த விசாரணை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் விமான நிலைய வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


குடும்பத் தகராறு… இளம் பெண் தற்கொலை

திருச்சி உப்பிலியபுரம் அருகே உள்ள வெங்கடாசலபுரம் ஒட்டர் தெரு பகுதியைச் சேர்ந்தவர் ராமராஜ் இவரது மனைவி ரம்யா (வயது 32) இந்த தம்பதிகளுக்கு திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளனர்
கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது இதனால் மனம் உடைந்த ரம்யா யாரும் எதிர்பாராத வகையில் வீட்டின் விட்டத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்தார் இது பற்றி அவரது தந்தை ராமசாமி உப்பிலியபுரம் போலீசில் புகார் செய்தார் அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுவுக்கு தடை போட்டதால் வாலிபர் தற்கொலை

திருச்சி, மணச்சநல்லூர் அருகே உள்ள கவுண்டம்பட்டி கீழூர் பகுதியைச் சேர்ந்தவர் கலைவாணன் (30 ). கூலி தொழிலாளி இதுவரை திருமணம் ஆகவில்லை. மதுவுக்கு அடிமையான இவர் தினமும் மது அருந்தி வந்தார். மகனின் எதிர்காலம் கருதி கவலை அடைந்த அவரது தந்தை கணேசன் இனிமேல் மது குடிக்க கூடாது என மகனை கண்டித்ததாக கூறப்படுகிறது.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான கலைவாணன் மதுவில் விஷம் கலந்து குடித்து மயங்கி விழுந்தார் உறவினர்கள் அவரை மீட்டு மணச்சநல்லூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர் இருந்தபோதிலும் அவர் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார் இது குறித்து மணச்சநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

மின் சாதனங்களை சேதப்படுத்திய வாலிபர் கைது

திருச்சி உறையூர் சாலை ரோடு பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடாசலம் (54, ) தில்லை நகர் பகுதியில் இணைய சேவை மையத்தை கடந்த ஏப்ரல் மாதம் முதல் நடத்தி வருகிறார். இந்த நிலையில் சம்பவத்தன்று கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சாப்பிட சென்றார். இதைத்தொடர்ந்து அவரது கடைக்குள் மர்ம நபர் அத்துமீறி நுழைந்து கடையில் உள்ள கண்ணாடி கதவு, கணினிகள், கேமராக்கள், பிரிண்டர்கள், கைரேகை கருவி, டேபிள், சேர், உள்ளிட்ட ரூபாய் ஒரு லட்சத்து 38 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை சேதப்படுத்தினார். .இதுகுறித்து தகவல் அறிந்த வெங்கடாஜலம் உடனடியாக தன் கடைக்கு வந்து அந்த மர்ம நபரிடம் இது குறித்து கேட்டபோது அவர் இவரை தாக்கி கீழே தள்ளியுள்ளார். இது குறித்து தில்லைநகர் போலீசார் வழக்கு பதிந்து உறையூர்மேலக்கல் நாயகன் தெருவை சேர்ந்த பிலால் ( 19 ) என்ற வாலிபரை கைது செய்து சிறையில் அடைத்தனர். விசாரணையில் அந்த வாலிபர் இதற்கு முன் வெங்கடாசலம் கடை நடத்தும் இடத்தில் தையல் கடை நடத்தியதும், முன்விரோதத்தில் வெங்கடாஜலத்தை தாக்கியதும் தெரிய வந்தது.

செம்பு கம்பி திருடிய வாலிபர் கைது

திருச்சி மர்தாண்டக்குறிச்சி அரிசி ஆலை தெருவை சேர்ந்தவர் விஜய் ஆனந்தன் (40 ).தில்லை நகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக வேலை செய்து வருகிறார் .இந்த நிலையில் நேற்று இவரது நிறுவனத்தில் குளிர்சாதன பெட்டியில் உள்ள சிம்பு கம்பியை மர்ம நபர் ஒருவர் திருட முயன்றதை இவர் கையும் களவுமாக பிடித்து தில்லைநகர் போலீசாரிடம் ஒப்படைத்தார். விசாரணையில் அவர் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தை சேர்ந்த சஞ்சய் குமார் ( 19 ) என்பது தெரிந்தது போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

பிரபல டாக்டர் வீட்டில் .. 8 பவுன் நகைகள் திருட்டு

திருச்சியில் மருத்துவர் வீட்டில் 8 பவுன் நகைகள் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்,
திருச்சி புத்தூர் அலுவலர் காலனியைச் சேர்ந்தவர் பாலாஜி ( 30, ) தனியார் மருத்துவ கல்லூரி மருத்துவர். இவரது வீட்டில் திருச்சி ராம்ஜிநகர் புங்கனூரை சேர்ந்த பனையடியான் (28) என்பவர் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் டாக்டர் பாலாஜியின் வீட்டில் தங்க நகைகள் திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்து அரசு மருத்துவமனை போலீசார் வழக்கு பதிந்து மருத்துவர் வீட்டில் வேலை செய்த பனையடியானை கைது செய்தனர் அவரிடம் இருந்து இரண்டு பவுன் தங்கச் செயின், மூன்று பவுன் தங்க வளையல் அரைப்பவன் மோதிரம் ஒரு பவுன் தங்க காசு ஒன்றரை போல் தங்க மோதிரம் என மொத்தம் 8 பவுன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

தனியார் விடுதியில் ஓட்டல் அதிபர் தற்கொலை

திருவாரூர் மாவட்டம் கூத்தனூர் பகுதியை சேர்ந்தவர் பரக்கத் அலி ( 61 ) புரூணை நாட்டில் கடந்த 20 ஆண்டுகளாக உணவகம் நடத்தி வந்தார் .இவரது மனைவி கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவருக்கு 15 வயதில் ஒரு மகள் உள்ளார் இந்த நிலையில் பரக்கத் அலி பாஸ்போர்ட் காலம் முடிவடைந்தது .அதை புதுப்பிக்க கடந்த ஜூலை மாதம் தன் சொந்த ஊருக்கு வந்தார். இதைத்தொடர்ந்து கடந்த அக்டோபர் 30ஆம் தேதி பாஸ்போர்ட்டை புதுப்பிக்க திருச்சிக்கு வந்தார் .இங்கு கண்டோன்மெண்ட் பகுதியில் உள்ள ஒரு தனியார் லாட்ஜில் அரை எடுத்து தங்கி இருந்தார். இந்த நிலையில் பரக்கத் அலி நேற்று தன் அறையில் பாஸ்போர்ட்டை புதுப்பிக்க முடியாமல் மன உளைச்சலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கன்டோன்மென்ட் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஸ்ரீரங்கம் போக்குவரத்து அலுவலக உதவியாளர் மயங்கி விழுந்து சாவு

திருச்சியில் போக்குவரத்து அலுவலக உதவியாளர் மயங்கி விழுந்து இறந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி மாவட்டம் துறையூர் கண்ணனூர் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் ( 48 ) திருவரங்கம் போக்குவரத்து அலுவலகத்தில் உதவியாளராக வேலை செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று சரவணன் இருசக்கர வாகனத்தை அலுவலகம் அருகே நிறுத்திவிட்டு சென்றபோது திடீரென மயங்கி விழுந்தார் உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் சரவணன் இருந்துவிட்டதாக தெரிவித்தனர் இதுகுறித்து திருவரங்கம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மனைவியை பிரிந்த கணவன் தீக்குளித்து தற்கொலை

திருச்சியில் மனைவியை பிரிந்த கணவன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ் ( 42 ) இவருக்கும் தேன்மொழி என்ற பெண்ணிற்கும் திருமணம் ஆகி இரண்டு மகள்கள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர் . தேன்மொழி திருச்சி திருவானைக்கோவில் பகுதியில் உள்ள தன் தாயுடன் வசித்து வந்தார்.இந்த நிலையில் சம்பவத்தன்று ராஜேஷ் திருவானைக்கோவிலில் உள்ள தன் மனைவி தன்னுடன் மீண்டும் வாழ அழைத்துள்ளார் அவர் வர மறுத்ததாக தெரிகிறது. இந்த நிலையில் ராஜேஷ் தன் மீது பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தார் அருகில் இருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் 70% தீக்காயம் அடைந்த ராஜேஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக டாக்டர்கள் தெரிவித்தன இது குறித்து திருவரங்கம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

திருச்சியில் ஆட்டோ டிரைவர் தூக்கிட்டு தற்கொலை

திருச்சியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட ஆட்டோ டிரைவர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி உறையூர் காவல் கார தெருவை சேர்ந்தவர் சித்திக் (27 )ஆட்டோ டிரைவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர் . இவரது மனைவி ரம்ஜனி. நேற்று முன்தினம் சித்திக் வீட்டிற்கு மது போதையில் வீட்டிற்கு வந்து தன் மனைவியிடம் தகராறு செய்தார் .இதனால் அவர் தன் பெற்றோர் வீட்டிற்கு சென்றார். இதனால் மன உளைச்சலில் இருந்து வந்த சித்திக் தன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் .இது குறித்து உறையூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மின்சாரம் தாக்கி இலங்கை வாலிபர் சாவு

திருச்சியில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த இலங்கை வாலிபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இலங்கை மட்டக்களப்பு காளி கோயில் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் 19 இவர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தன் உறவினர் திருமணத்திற்காக சேலம் மாவட்டத்திற்கு குடும்பத்துடன் வந்தார். இவரது உறவினர் கார்த்திக் என்பவர் திருச்சி அண்ணாமலை நகர் பகுதியில் புதிய கட்டடத்தில் ஆசாரியாக வேலை செய்து வருகிறார் அவரைக் காண லுக்சனன் நேற்று முன்தினம் இங்கு வந்தார் இந்த நிலையில் நேற்று லுக்சனன் அந்த புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டடத்தை சுற்றி பார்த்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக மின் ஒயரை தொட்டு மின்சாரம் பாய்ந்து மயங்கி விழுந்தார் உடனடியாக அவரை திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் அங்கு அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர் இதுகுறித்து உறையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கஞ்சா விற்ற வாலிபர் கைது

திருச்சி கண்டோன்மென்ட் குட்செட் சாலை அருகே கஞ்சா விற்பனை நடப்பதாக மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது போலீசார் அங்கு சோதனையை நடத்தி கஞ்சா விற்ற ராம்ஜி நகர் மில் காலனி பகுதியைச் சேர்ந்த ஜெகநாதன் 41 என்ற வாலிபரை கைது செய்தனர் பின்னர் பெயிலில் வெளியே விட்டனர். அவரிடமிருந்து 64 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

புகையிலை விற்ற வாலிபர் கைது

திருச்சி கரூர் சாலை அருகே புகையிலை பொருட்கள் விற்பனை நடப்பதாக கோட்டை போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது அதன் அடிப்படையில் போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தி புகையிலை விற்ற கரூர் பைபாஸ் சாலை பாலகிருஷ்ணன் நகரை சேர்ந்த தர்ஷன் 21 என்ற வாலிபரை கைது செய்து சிறையில் அடைத்தனர் அவரிடமிருந்து 2 1/2 கிலோ புகையிலை பொருட்கள் பரிமுதல் செய்யப்பட்டது மேலும் புகையிலை வைத்திருந்த டூவீலரும் பறிமுதல் செய்யப்பட்டது.

error: Content is protected !!