Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஜெயங்கொண்டம் அருகே சிறுமியை காதலிக்க வற்புறுத்திய வாலிபர் கைது…

கிருஷ்ணகிரி மாவட்டம், சின்னப்பாறை கிராமத்தை சேர்ந்தவர் பார்த்திபன். இவர் திருப்பூர் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்த நிலையில் அதே கம்பெனியில் வேலை பார்த்து வந்த அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த பெண்ணின் தங்கையான 16 வயதுடைய சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டது. அப்போது இருவரும் செல்போனில் வாட்ஸ் அப்பில் போட்டோக்களை பகிர்ந்து கொண்டு அடிக்கடி பேசி வந்துள்ளதாக கூறப்படுகிறது . இந்நிலையில் சிறுமியை காதலிக்க கூறி பார்த்திபன் வற்புறுத்தியுள்ளார். சிறுமி மறுத்து வந்தநிலையில் தன்னை காதலிக்க மறுத்தால் தன்னிடம் வாட்ஸ் அப்பில் உள்ள அனைத்து போட்டோ வீடியோக்களை இணையதளத்தில் பதிவிட்டு விடுவதாக கூறி மிரட்டி உள்ளார். இதுகுறித்து அந்த சிறுமி ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி வழக்கு பதிவு செய்து, கிருஷ்ணகிரிக்கு சென்று பார்த்திபனை கைது செய்து விசாரித்து வருகின்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!