Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஆதார் இருந்தால் மட்டும் போதும்.. 1 மணி நேரத்தில் 5 கிலோ சிலிண்டர் புக்

இந்தியாவில் எரிவாயு தட்டுப்பாடு தலைவிரித்தாடுகிறது. அதாவது, எரிவாயு தட்டுப்பாட்டை சமாளிக்க பல்வேறு  கட்டுப்பாடுகளையும் மத்திய அரசு மேற்கொண்டது. அதாவது, சிலிண்டர் முன்பதிவு கால இடைவெயியில் நகர்ப்புறங்கள், கிராமப்புறங்களில் நீடித்தது. 

மேலும், கடந்த பிப்ரவரி மாதம் கேஸ் சிலிண்டர் விலையை உயர்த்தியது.  இதற்கிடையில, புலம்பெயர் தொழிலாளர்கள் சிலிண்டர் பெற முடியாமல் தவித்து வருகின்றனர். இவர்கள் சிலிண்டர் இணைப்பு பெறுவது கஷ்டம் என்பதால் 5 கிலோ சிலிண்டரை பயன்படுத்தி வருகின்றனர். எல்பிஜி தட்டுப்பாட்டுக்கு மத்தியில், 5 கிலோ சிலிண்டரிலும் பற்றாக்குறை ஏற்பட்டது.  

இதனால், அவர்கள் சிலிண்டர் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டது. இதற்கிடையில், புலம்பெயர் தொழிலாளர்கள் கேஸ் சிலிண்டர் முன்பதிவு செயல்முறையில் மாற்றம் செய்துள்ளது. அதாவது, இதற்கு முன்பு முகவரி சான்று மூலம் கேஸ் சிலிண்டரை முன்பதிவு செய்து வந்தனர். தற்போது  அதில் சில மாற்றங்களை மத்திய அரசு செய்துள்ளது. 

5 கிலோ சிலிண்டரை வாங்குவதற்கு நுகர்வோர்கள் அரசு அங்கீகரித்த ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை அடையாள சான்றாக சமர்ப்பிக்க வேண்டும். 5 கிலோ சிலிண்டர் வாங்க ஆதார் அட்டை, பான் கார்டு, ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, மாநில அரசு அல்லது மத்திய அரசால் வழங்கப்பட்ட ஏதேனும் ஒரு அடையாள ஆவணத்தை கொடுத்து நீங்கள் 5 கிலோ சிலிண்டரை பெற்றுக் கொள்ளலாம். முகவரி சரிபார்ப்பு உட்பட கூடுதல் ஆவணங்கள் எதுவும் தேவையில்லை.

வீட்டு உபயோக சிலிண்டர் போன்று இல்லாமல், 5 கிலோ சிலிண்டரை அங்கீகரிக்கப்பட்ட விற்பனை நிலையங்களில் சில நிமிடங்களில் பெற்றுக் கொள்ளலாம். இதனால், அவசர தேவைகளுக்கு 5 கிலோ சிலிண்டர் பயனுள்ளதாக இருக்கும். அதிகபட்சம் 10 நிமிடங்களில்  நீங்கள் 5 கிலோ சிலிண்டரை பெற்றுக் கொள்ளலாம்.  5 கிலோ சிலிண்டர் விலை ரூ.549 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலை மாறிங்களுக்கு  மாநிலம் மாறுப்படும். 

இந்த சிலிண்டரை வாங்க, அருகிலுள்ள பாரத் கேஸ், இன்டேன் அல்லது ஹெச்பி விநியோகஸ்தரிடம் செல்ல வேண்டும். சில மளிகைக் கடைகள் மற்றும் சில்லறை விற்பனை நிலையங்களும் இந்த வசதியை வழங்குகின்றன. பணம் செலுத்திய உடனேயே சிலிண்டர் வழங்கப்படும். மீண்டும் நிரப்புவதற்காக, நாட்டில் உள்ள எந்தவொரு விற்பனை நிலையம் அல்லது விநியோகஸ்தரிடம் வேண்டுமானாலும் செல்லலாம்.

5 கிலோ சிலிண்டரை முன்பதிவு செய்வது எப்படி?

 பாரத் கேஸ் நிறுவனத்தின் கட்டணமில்லா எண்ணான 1800 22 4344 என்ற எண்ணை அழைத்தால் கேஸ் முன்பதிவு செய்த 1 மணி நேரத்தில் நிமிடத்தில் நீங்கள் பெறலாம். அந்தந்த எண்ணெய் நிறுவனங்களில் கட்டணமில்லா எண்ணை தொடர்பு கொண்டு நீங்கள் கேஸ் சிலிண்டரை பெற்றுக் கொள்ளலாம்.  இந்தியன் ஆயில் 1800 2333 555 என்ற எண்ணையும் தொடர்பு கொண்டு சிலிண்டர் முன்பதிவு செய்யலாம்.  ஹெச்பி நிறுவனத்தின்  1800 2333 555 என்ற எண்ணையும் தொடர்பு கொண்டு நீங்கள் 5 கிலோ சிலிண்டரை பெற்றுக் கொள்ளலாம். இல்லையெனில் உங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள எண்ணெய் நிறுவனத்திற்கு சென்று, நீங்கள் 5 கிலோ சிலிண்டரை உடனே பெற்றுக் கொள்ளலாம்.

error: Content is protected !!