Skip to content

கபாடி போட்டி.. மகளிர் மும்பை அணி- ஆண்கள் தமிழ்நாடு ஏ அணி 8 கோப்பை வென்றது

தஞ்சையில் நடைபெற்ற அகில இந்திய அளவிலான கபாடி போட்டியில் பெண்கள் பிரிவில் அஸ்வா மும்பை அணி மற்றும் ஆண்கள் பிரிவில் தமிழ்நாடு ஏ அணி8 கோப்பை வென்றது

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள ஒக்கநாடு வேலையூரில் தந்தை பெரியார் இளைய திலகங்கள் கபடி கழகம் சார்பில் 36 ஆவது அகில இந்திய அளவிலான கபாடி போட்டி நடைபெற்றது. இதில் தமிழ்நாடு ஹரியானா குஜராத் பீகார் உத்தரபிரதேஷ் டெல்லி மகாராஷ்டிரா கர்நாடகா கேரளா

ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த 18 பெண்களணி 16 ஆண்கள் அணி கலந்து கொண்டனர். லீக் முறையில் நடைபெற்ற இப்போட்டியின் இறுதி ஆட்டம் இன்று நடைபெற்றது. போட்டியினை திராவிடர் கழக தலைவர் கி வீரமணி முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் ஆகியோர் தொடங்கி வைத்து வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகளை வழங்கினர். இதில் மகளிர் பிரிவில் நடைபெற்ற

போட்டியில் சாய் சக்தி மும்பை அணியை மும்பை அஸ்வா மணி 32 க்கு 30 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது. இதேபோல் ஆண்கள் அணியில் தமிழ்நாடு ஏ அணி டெல்லி தமிழ் தலைவாஸ் அணியை 40க்கு 35 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது. மிண்ணொழியில் நடைபெற்ற போட்டியினை ஏராளமான கிராம மக்கள் கலந்து கொண்டு வீரர்களை உற்சாகப்படுத்தி வெற்றி

பெற்ற வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்க பரிசு மற்றும் கோப்பை வழங்கப்பட்டது. பரிசுத்தொகை மற்றும் கோப்பை அணி திராவிட கழக தலைவர் கி வீரமணி, வைத்திலிங்கம் வழங்கினார்கள்.

error: Content is protected !!