Skip to content

கபிஸ்தலம் அருகே பருத்தி மறைமுக ஏலம்….

தஞ்சாவூர் விற்பனைக் குழு, பாபநாசம் அடுத்த கபிஸ்தலம் அருகே கீழக் கொட்டையூர் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் பருத்தி மறை முக ஏலம் நடந்தது. ஏலத்திற்கு ஒழுங்கு முறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் பிரியமாலினி முன்னிலை வகித்தார். ஏலத்தில் கும்பகோணம், இதைச் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து 637 விவசாயி கள் சராசரியாக 600 குவிண்டால் பருத்தி எடுத்து வந்தனர். ஏலத்தில் கும்பகோணம், பண்ருட்டி, விழுப்புரம், சேலம், திருப்பூர் உள்ளிட்டப் பகுதிகளைச் சேர்ந்த 7 வணிகர்கள் கலந்துக் கொண்டு, அதிகப் பட்சம் குவிண்டாலுக்கு ரூ.7069, குறைந்தப் பட்சம் ரூ.5509, சராசரி ரூ.6169 என விலை நிர்ணயம் செய்தனர். பருத்தியின் மதிப்பு சராசரி ரூ 36 இலட்சம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!