Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கல்லணை நாளை திறப்பு…

டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணை திறக்கப்பட்டதைத் தொடர்ந்து கல்லணை நாளை 16ம் தேதி காலை திறக்கப்படவுள்ளது. டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையைத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடந்த 12ம் தேதி காலை திறந்து வைத்தார். அணையிலிருந்து ஆரம்பத்தில் விநாடிக்கு 3 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. பின்னர் படிப்படியாக தண்ணீரின் உயர்த்தப்பட்டு, தற்போது விநாடிக்கு 10 ஆயிரம் கன அடி வீதம் திறக்கப்படுகிறது.

அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் நேற்று கரூர் மாவட்டம் மாயனூரைக் கடந்து முக்கொம்பை நோக்கி வந்தது கல்லணைக்குக் காவிரி நீர் இன்று இரவு வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்ந்து, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, அரியலூர், கடலூர் ஆகிய மாவட்டங்களின் பாசனத்துக்காகக் கல்லணையிலிருந்து காவிரி, வெண்ணாறு, கல்லணைக் கால்வாய், கொள்ளிடம் ஆகியவற்றில் நாளை காலை 9.30 மணியளவில் தண்ணீர் திறந்துவிடப்பட உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!