Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கப்பல் சின்னத்திற்கு வாக்கு சேகரிக்கும் பணியில் தஞ்சை வேட்பாளர்..

நாடாளுமன்ற தேர்தலில் தஞ்சை தொகுதியில் காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் வேட்பாளர் செந்தில்குமார் போட்டியிடுகிறார். இவர் தனக்கு வாக்குகேட்டு தொகுதி முழுவதும் கிராமம் கிராமமாக வாக்கு சேகரித்து வருகிறார். அந்த வகையில் மதுக்கூர் ஒன்றியம் கிழக்குறிச்சியில் மக்களிடம் வாக்குகள் சேகரித்தார். பின்னர்
ஒலையக்குன்னம் கிராமத்தில் பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர்.

கப்பல் சின்னத்தில் பெறுவாரியான வாக்குகளை பெற்றுத் தருவோம் என உறுதி அளித்தனர். பின்னர் பொதுச் செயலாளர்
பி ஆர்.பாண்டியன் வாக்காளர்களிடம் வாக்கு கேட்டு பிரச்சாரம் செய்தார். நிகழ்ச்சியில் தஞ்சாவூர் மாநகர செயலாளர் பி அறிவு, மாநில இளைஞரணி செயலாளர் மகேஸ்வரன், தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் வி எஸ் வீரப்பன், மதுக்கூர் ஒன்றிய செயலாளர் அருள்சாமி, தலைவர் அந்தோணிசாமி, முன்னாள் ஒளையக்குண்ணம் ஊராட்சி மன்ற தலைவர் மாரிமுத்து, பட்டுக்கோட்டை திருவோணம் ஒன்றிய செயலாளர்கள் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!