Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கருணாநிதி, ஒரு அறிவுபுதையல்- கருத்தரங்கில் ஸ்டாலின் பேச்சு

சென்னை கலைவாணர் அரங்கில்,  கலைஞர் நூற்றாண்டு  கருத்தரங்கம் நடந்தது.  இந்த கருத்தரங்கில்  நூற்றாண்டு விழா மலர் வெளியிட்டு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசினார். அவர் பேசியதாவது:

படைப்பாளிகளை வாழும் காலத்திலேயே போற்ற வேண்டும்.  இந்திய இலக்கியத்தின் முகமாக கலைஞர் அறியப்படும் வாய்ப்பு கிடைத்து உள்ளது.  டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலையில்,   தமிழ் இருக்கை அமைத்தவர் கலைஞர்.  சாகித்ய அகாடமி விருது பெற்ற 15 பேருக்கு தலா  ரூ.1 கோடி மதிப்பில் வீடு வழங்கப்பட்டுள்ளது. 34 தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடமையாக்கப்படடுள்ளது.  உரிமைத்தொகை இல்லாமல்  கலைஞரின் நூல்கள் நாட்டுடமையாக்கப்பட்டுள்ளது.

அறிவுபுதையலாக திகழ்கிறார் கலைஞர்.  ஒரு தலைப்புக்குள் சுருக்கிட முடியாத பன்முகத்திறமை கொண்டவர் கலைஞர். தொட்ட துறைகள் எல்லாவற்றிலும் கோலோச்சியவர் அவர்.

கலைஞரின்  மேடை உரைகள் இலக்கியத்தின் மறுமுகம்.   80 ஆண்டுகள் பொதுவாழ்வுக்கு அர்ப்ணித்தவர் அவா்.  கலைஞரின் தமிழ்த் தொண்டினை அடுத்த தலைமுறைக்கும் கொண்டு சேர்க்க வேண்டும்.  கருணாநிதி வழயில் பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

error: Content is protected !!