Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கருணாநிதி பிறந்தநாள்விழா… ஸ்ரீரங்கத்தில் நலத்திட்ட உதவி வழங்கிய எம்எல்ஏ பழனியாண்டி

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான மறைந்த கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாள் விழா ஸ்ரீரங்கம் தொகுதிக்கு உட்பட்ட நாகமங்கலம் சோமரசம்பேட்டை மற்றும் ஸ்ரீரங்கம் சட்டமன்ற அலுவலகம் உள்படபல்வேறு பகுதிகளில் கொண்டாடப்பட்டது. இதில் கலந்து கொண்ட ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி கலைஞர் கருணாநிதியின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி அங்கிருந்த பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினார். மேலும் ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். நாகமங்கலம் ஊராட்சியில் நடைபெற்ற விழாவில் மணிகண்டம் ஒன்றிய செயலாளர் மாத்தூர் கருப்பையா, தலைமைக்கழக பேச்சாளர் இடி முரசு. ந. மணிமுத்து, முன்னாள் ஊராட்சி தலைவர்கள் நாகமங்கலம் வெள்ளைச்சாமி, மேக்குடி லாரன்ஸ், நவலூர் குட்டப்பட்டு ஜார்ஜ் பெர்னாண்டஸ், அம்மா பேட்டை காந்தி, திமுக நிர்வாகிகள் அதவத்தூர் கொடியரசு, சேதுராப்பட்டி தங்க ரெத்தினம் முன்னாள் ஊராட்சி செயலாளர்கள் நாகமங்கலம் முத்துகருப்பன், பாகனூர் மனோகர், மாவட்ட பிரதிநிதிகள் சந்தியாகு, குணா, கண்ணன்,மாவட்ட மீனவரணி அமைப்பாளர் பால்ராஜ்,  மாவட்ட சிறுபான்மை நல உரிமை பிரிவு துணை அமைப்பாளர் இருதயராஜ், மாவட்ட ஆதி திராவிடர் நலக்குழு துணை அமைப்பாளர் பசுபதி, தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் திருச்சி லெட்சுமணன், முன்னாள் கவுன்சிலர்கள் சுரேஷ் குமார், டேவிட் ராஜதுரை, அப்பீஸ்தீன்,சண்முகம் மற்றும் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் கிளை செயலாளர்கள் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
error: Content is protected !!