Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்த கருணாஸ்

நடிகர் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு உடனடியாகத் தணிக்கைச் சான்றிதழ் வழங்க தனி நீதிபதி உத்தரவிட்டிருந்தார். ஆனால், இதனை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி அமர்வு, வழக்கின் விசாரணையை ஜனவரி 21-ம் தேதிக்குத் தள்ளிவைத்தது. இதன் காரணமாக, திட்டமிட்டபடி பொங்கல் பண்டிகைக்குப் படம் வெளியாவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்தச் சூழலில் விஜய்க்கு ஆதரவாகக் குரல் கொடுத்துள்ள நடிகர் கருணாஸ், மத்திய அரசு தனது அதிகார பலத்தைப் பயன்படுத்தி அனைவரையும் அடிபணிய வைக்க முயற்சிப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளார். விஜய் அரசியலுக்கு வந்துள்ளதால், அவரை முடக்கும் நோக்கில் தணிக்கைக் குழுவை ஒரு கருவியாக மத்திய அரசு பயன்படுத்துகிறதோ என்ற பலத்த சந்தேகம் மக்களிடையே எழுந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

விஜய்க்கு எதிராகத் திட்டமிட்டு நடத்தப்படும் இத்தகைய நிர்பந்தங்களை வன்மையாகக் கண்டிப்பதாகத் தெரிவித்த கருணாஸ், ‘ஜனநாயகன்’ திரைப்பட விவகாரத்தில் விஜய்க்கு ஆதரவாகத் தானும், தென்னிந்திய நடிகர் சங்கமும் உறுதுணையாக இருப்போம் என்று உறுதியளித்துள்ளார்.

error: Content is protected !!