Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கரூரில் தொலைந்து போன 208 செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைத்த எஸ்பி..

கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பொதுமக்களிடம் இருந்து திருடுபோன மற்றும் தொலைந்து போன செல்போன்கள், சைபர் கிரைம் காவல் நிலையத்தில் பெறப்பட்ட புகார் மனுக்கள் மீது முறையான விசாரணை மேற்கொண்டு எடுக்கப்பட்ட நடவடிக்கையில் 208 செல்போன்கள் மற்றும் இணைய வழி குற்றங்களில் பாதிக்கப்பட்டு பொதுமக்கள் இழந்த ரூ. 73 லட்சம் ரூபாயை உரிய நபர்களிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ் கான் அப்துல்லா ஒப்படைத்தார்.

மேலும், செல்போன் தொலைத்தவர்கள் மற்றும் இணைய வழி குற்றங்களில் பாதிக்கப்பட்ட நபர்கள் இதுபோன்று ஏமாற வேண்டாம் என்று அறிவுரை கூறினார். சந்தேகத்திற்குரிய நபர்கள் ஆன்லைன் மூலமாக தொடர்பு கொண்டாலோ அல்லது லிங்க் அனுப்பி அதனை பதிவு செய்யுங்கள் என்று கூறினாலோ உடனடியாக சைபர் கிரைம் காவலர்களை தொடர்பு கொள்ள வேண்டும் என அறிவுரை கூறினார். இந்நிகழ்ச்சியில் காவல்துறை அதிகாரிகள் சைபர் கிரைம் நிலைய காவலர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!