Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கரூரில் 4வது நாளாக வருமானவரித்துறை சோதனை…

அமைச்சர் எ.வ வேலுக்கு தொடர்புடைய இடங்களில் 3-ம் தேதி தொடங்கிய சோதனை பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது.

இதன் ஒரு பகுதியாக கரூர் மாவட்டத்தில் நான்கு இடங்களில் சோதனை தொடங்கின.

இந்நிலையில் கரூர் மாநகராட்சி பகுதியில் திமுகவை சேர்ந்த மறைந்த முன்னாள் கரூர் மாவட்ட செயலாளர் வாசுகி முருகேசனின் சகோதரி பத்மாவின் வீடு,காந்திபுரம் பகுதியில் உள்ள சுரேஷ் என்பவர் நிதி நிறுவனம், வையாபுரி நகர் பகுதியில் உள்ள அவரது வீடு என தொடர்ந்து மூன்று இடங்களில் கடந்த 3 நாட்களாக நடைபெற்றது. மூன்றாவது நாளான நேற்று வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை முடிவில் மறைந்த முன்னால் திமுக மாவட்ட செயலாளர் வாசுகி முருகேசனின் சகோதரி பத்மா என்பவரின் வீட்டில் சோதனை

நிறைவடிந்தது. தொடர்ந்து நள்ளிரவு வரை சுரேஷ் என்பவரின் நிதி நிறுவனம் மற்றும் அவரது வீடு ஆகிய இடங்களில் சோதனை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சிறிய ஓய்வெடுப்பதற்காக தங்கம் விடுதிக்கு சென்ற அதிகாரிகள், 2 இடங்களிலும் மத்திய பாதுகாப்பு படை போலீசாரை பாதுகாப்பில் அமர்த்திவிட்டு சென்றனர்.

இந்நிலையில் தற்போது மீண்டும் வருமான வரி துறை அதிகாரிகள் 4-வது நாளாக 2 இடங்களிலும் சோதனைக்கு வந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!