Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கரூர்- 4 போலீசார் சிபிஐ விசாரணைக்கு ஆஜர்.

கரூர் துயரச் சம்பவம் -சிபிஐ அலுவலகத்திற்கு, சம்பவத்தின் போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 4 காவலர்கள் விசாரணைக்கு ஆஜராகி உள்ளனர்.

கரூர், வேலுச்சாமிபுரம் பகுதியில் கடந்த செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கூட்ட நெரிசல் காரணமாக 41 நபர்கள் உயிரிழந்தனர்.

இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணை சிபிஐக்கு மாற்றப்பட்டு சிபிஐ அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் மற்றும் வேலுச்சாமிபுரம் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள், வணிக நிறுவன உரிமையாளர்கள் மற்றும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் ஆம்புலன்ஸ் உரிமையாளர்கள் தவெக மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் அதை தொடர்ந்து இந்த சம்பவத்தில் உயிரிழந்த குடும்பத்தின் உறவினர்கள், பாதிக்கப்பட்ட நபர்கள் உட்பட பல்வேறு கட்ட விசாரணை நடைபெற்றுள்ளது.

தொடர்ந்து சிபிஐ அதிகாரிகள் பல்வேறு கட்ட விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் இன்று தான்தோன்றி மலை பொதுப்பணித்துறை சுற்றுலா மாளிகையில் தற்காலிக சிபிஐ அலுவலகத்திற்கு சம்பவம் நடைபெற்ற போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஒரு காவல் உதவி ஆய்வாளர், 3 காவலர்கள் என மொத்தம் 4 காவலர்கள் இன்று விசாரணைக்காக ஆஜராகி உள்ளனர்.

error: Content is protected !!