Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கரூரில் களைகட்டிய ஆட்டுச்சந்தை… 1 கோடிக்கு மேல் விற்பனை…

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சாலையில் உள்ள மணல்மேடு பகுதியில் வாராவாரம் புதன்கிழமைதோறும் நடக்கும் ஆட்டுச்சந்தை மிகவும் பிரபலம். கரூர் தொடங்கி, திண்டுக்கல், திருப்பூர், மதுரை வரை வியாபாரிகள் இங்கே ஆடுகளை வாங்க வருகிறார்கள். பொங்கல் விழாவையொட்டி, தொடர் விடுமுறை நாட்கள் உள்ளதால் மக்கள் அசைவம் சாப்பிட

விரும்புவார்கள் என்பதால், இந்த புதன்கிழமை ஆட்டுச்சந்தை களைகட்டியது. இன்று நடைபெற்ற சந்தையில் ரூ. 2000 தொடங்கி ரூ. 25,000 வரை ஆடுகள் விலைபோயின. நூற்றுக்கணக்கான வாகனங்களில் வந்த வியாபாரிகள் ஆடுகளை ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர். ரூ. 1 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனை ஆனதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!