Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கரூர் மாவட்டத்தில் அதிமுக வேட்பாளர் அறிவிப்பால் வெடித்த பாஜக அதிருப்தி

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், கரூர் மாவட்டத்தில் உள்ள நான்கு தொகுதிகளிலும் அதிமுகவே போட்டியிடும் என பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருப்பது, அதன் கூட்டணிக் கட்சியான பாஜகவினரிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டத்தில் உள்ள கரூர்,

அரவக்குறிச்சி, குளித்தலை, கிருஷ்ணராயபுரம் ஆகிய நான்கு தொகுதிகளிலும் அதிமுகவே நேரடியாகக் களம் காண்கிறது.

குறிப்பாக அரவக்குறிச்சி அல்லது குளித்தலை ஆகிய தொகுதிகளில் ஏதேனும் ஒன்று தங்களுக்கு ஒதுக்கப்படும் என பாஜகவினர் நம்பிக்கையுடன் இருந்தனர்.

முதல் கட்ட வேட்பாளர் பட்டியலில் கரூரில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்ட நிலையில், மற்ற தொகுதிகளிலும் அதிமுகவே போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.

அதிமுகவின் இந்த தன்னிச்சையான முடிவால் அதிருப்தியடைந்துள்ள பாஜகவினர் சமூக வலைத்தளங்களில் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக பாஜகவிற்கு என்ன மரியாதை தந்ததோ, அதே மரியாதையை இந்தத் தேர்தலில் நாங்கள் திருப்பித் தருவோம் என்ற வாசகம் தற்போது கரூர் மாவட்ட பாஜகவினர் மத்தியில் வைரலாகி வருகிறது.

குறிப்பாக 2021 ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதியில் பாஜக சார்பில் அண்ணாமலை போட்டியிட்டு தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!