இந்திய சுதந்திரப் போராட்ட வீரரான ‘கப்பலோட்டிய தமிழன்’ வ.உ.சி.யின் நினைவு தினத்தையொட்டி, கரூர் மாவட்ட வ.உ.சி பேரவை மற்றும் அனைத்துலக வ.உ.சி சங்கம் சார்பில் அவரது சிலைக்கு மாலை அணிவித்தும், மரியாதை செலுத்தியும் அஞ்சலி செலுத்தினார்.
கரூர் மாவட்டம், தான்தோன்றி மலைப் பகுதியில் கரூர் மாவட்ட வ.உ.சி பேரவை சார்பில் கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனார் மார்பளவு திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மௌன அஞ்சலி செலுத்தினார்கள்.
கரூர் மாவட்ட வ உ சி பேரவை தலைவர் மகேஸ்வரன் தலைமையில் மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதே போல அனைத்து உலக வ உ சி பிள்ளைமார் சங்கம் சார்பில் அதன் நிறுவனத் தலைவர் பொன் சக்திவேல் தலைமையில் வ உ சி யின் சிலைக்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது. திமுக மாநில செயற்குழு உறுப்பினர் காலனி செந்தில் திராவிட கழகம் மாநில பொதுக்குழு உறுப்பினர் அன்பு, .மற்றும் மாவட்ட நகர நிர்வாகிகள் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

