Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கரூர் சம்பவம்-9 பேரிடம் சிபிஐ விசாரணை

கரூர் சிபிஐ அலுவலகத்திற்கு விசாரணைக்காக இன்று 1 உதவி காவல் ஆய்வாளர், 2 பெண் காவலர்கள்,2 ஆண் காவலர்கள், 2 ஊர்காவலர் படையினர் தனியார் ஆம்புலன்ஸ் உரிமையாளர், ஓட்டுநர் என 9 பேர் விசாரணைக்கு ஆஜர்.

கரூர் வேலுச்சாமிபுரம் பகுதியில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27ம் தேதி தமிழக வெற்றிக்கழக தலைவர் நடிகர் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 நபர்கள் உயிரிழந்தனர்

வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் சிபிஐக்கு மாற்றப்பட்டு சிபிஐ அதிகாரிகள் தான்தோன்றி மலை பொதுப்பணித்துறை அலுவலகத்தில் தங்கி விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர் .

இந்த நிலையில் கடந்த 12ஆம் மற்றும் 19-ஆம் தேதி டெல்லியில் தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் விஜய் சிபிஐ அலுவலகத்தில் நேரில் ஆஜராகி பல்வேறு விளக்கம் அளித்தார்.

இந்த நிலையில் இன்று கரூர் தான்தோன்றிமலை பொதுப்பணித்துறை சுற்றுலா மாளிகையில் சம்பவம் நடந்த அன்று பணியில் இருந்த 1 உதவி காவல் ஆய்வாளர், 2 பெண் காவலர்கள்,2 ஆண் காவலர்கள், 2 ஊர்காவலர் படையினர் தனியார் ஆம்புலன்ஸ் உரிமையாளர், ஓட்டுநர் என தற்போது வரை 9 நபர்கள் விசாரணைக்கு ஆஜராகி உள்ளனர்.

error: Content is protected !!