Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம்…

தென் தமிழகத்தில் புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி, ஸ்ரீ சௌந்தரநாயகி, ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் ஆடி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு இன்று மாலை காலபைரவருக்கு எண்ணைக்காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், விபூதி, பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

அதை தொடர்ந்து கால பைரவருக்கு பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அணிவித்த பிறகு, சுவாமிக்கு வடமாலை சாற்றப்பட்டது. பின்னர் ஆலயத்தில் சிவாச்சாரியார் காலபைரவருக்கு உதிரிப் பூக்களால்

நாமாவளிகள் கூறி, அதை தொடர்ந்து சுவாமிக்கு தூப தீபங்கள் காட்டப்பட்டு, நெய்வேதியம் சமர்ப்பிக்கப்பட்டு, பஞ்ச கற்பூர ஆலாத்தியுடன் மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் கரூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!