Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கரூர் அருகே …. கோவில் கும்பாபிசேகம்

கரூர் மாவட்டம், புகளூர் தாலுகா, தென்னிலை மேல்பாகம் பகுதியில் உள்ள குள்ளம்பாளையத்தில் அருள் பாலித்து வரும் ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ மாயவப் பெருமாள், ஸ்ரீ பட்டாளம்மன், ஸ்ரீ முனி வீரசாமி, ஸ்ரீ மதுரை வீரன், வெள்ளையம்மாள், பொம்மியம்மாள் ஆலயம் புதுப்பிக்கப்பட்டு மகா கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

கும்பாபிஷேக விழா மங்கல இசையுடன் துவங்கியது. பின்னர் விநாயகர் வழிபாடு, புண்யாகம்,நான்காம் கால பூஜை, மண்டபார்சனை, வேதிகார்ச்சனை, அக்னிகார்யம், ஸ்பர்சாஹூதி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

பின்னர் யாக வேள்வியில் பூஜிக்கப்பட்ட புனித நீரை எடுத்துச் சென்று, கோவில் கலசத்தில் ஊற்றி கும்பாபிஷேக விழாவை வெகு விமரிசையாக சிவாச்சாரியார்கள் நடத்தினர். நிகழ்ச்சியின் நிறைவில் மூலவருக்கு மகா தீபாரனை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள், பக்தர்கள், கோவில் குடிப்பாட்டுக்காரர்கள் கலந்து கொண்டனர். விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!