Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கரூர் அருகே 1 லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்கள் பறிமுதல்…

 

கரூர் மாவட்டம், குட்டை கடை பகுதியில் ஈரோடு தேசிய நெடுஞ்சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது TN 66 B 6212 என்ற பதிவு எண் கொண்ட காரை நிறுத்தி சோதனை செய்ததில் அரசால் தடை செய்யப்பட்ட சுமார் 1 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஹான்ஸ் பாக்கெட் 120 கிலோ, கூல் லிப் 10 கிலோ மற்றும் பான் மசாலா 17 கிலோ என மொத்தம் 147 கிலோ பொருட்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்து, காரை ஓட்டி வந்த நாமக்கல் மாவட்டம், ஆண்டிபாளையம் பகுதியைச்

சேர்ந்த தேவா என்ற தேவராஜ் (42) என்பவரை வழக்கு பதிந்து கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

இவ்வழக்கில் சிறப்பாக செயல்பட்டு தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை பறிமுதல் செய்த ரோந்து பணியில் இருந்த காவலர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா பாராட்டினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!