Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கரூர் அருகே நள்ளிரவில் ”கட்டு சேவலை” திருடி சென்ற மர்ம நபர்….

கரூர் அடுத்த ஆத்தூர் பாலிடெக்னிக் சாலையில் உள்ள ராஜீவ் காந்தி நகரை சேர்ந்தவர் பிரகாஷ் (27). இவர் தனியார் டிஜிட்டல் சர்வேயராக பணிபுரிந்து வருகிறார். அருகிலுள்ள சாந்தி நகரில் இவருக்கு சொந்தமான காலி இடத்தில் கொட்டகை அமைத்து, அதில் கட்டு சேவல்கள் வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறார். பண்டிகை காலங்களில் சேவல் கட்டு நடத்தும் நபர்கள் இவரிடம் வந்து, சேவல்களை வாங்கிச் செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர்.

இவரது கொட்டகையில் சுமார் 30 கட்டு சேவல்கள் வளர்த்து வந்த நிலையில், கடந்த 10 நாட்களுக்கு முன்பு 4 சேவல்கள் திருடப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து நேற்று நள்ளிரவு சுமார் 12.10 மணியளவில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க மர்ம நபர் ஒருவர் கொட்டகையை சுற்றி

அமைக்கப்பட்டுள்ள கம்பிவேலியை தாண்டி குதித்து, உள்ளே சென்று சேவல் ஒன்றை திருடி சென்றுள்ளார்.

நாய் குறைக்கும் சத்தம் கேட்டதால் ஒரு சேவலை மட்டும் எடுத்துக்கொண்டு அந்த நபர் அங்கிருந்து விரைவாக தப்பி உள்ளார். இது தொடர்பான காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவாகி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக சிசிடிவி ஆதாரங்களுடன் காவல் நிலையத்தில் புகார் அளிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!