Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கரூர் பஞ்சுகள் வைத்திருந்த தற்காலிக குடோனில் தீ விபத்து.. பரபரப்பு

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட வெங்கமேடு பகுதியில் குளத்துப்பாளையம் செல்லும் சாலையில் ஓட்டு கட்டிடத்தில் செயல்பட்டு வரும் தனியார் மண்டபத்தில் பழைய டெக்ஸ்டைல் துணிகள் மற்றும் பஞ்சுகளை வியாபாரம் செய்யும் தற்காலிக குடோன் செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில், ஊழியர்கள் வேலை செய்து கொண்டிருந்த நிலையில் திடீரென

குடோனில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

ஆரம்பத்தில் அங்கிருந்தவர்கள் தீயை கட்டுப்படுத்த முயற்சித்தனர், தீ வேகமாக பரவி கொழுந்துவிட்டு எரிய தொடங்கியது.

அப்பகுதி பொதுமக்கள் தீயணைப்பு துறையினருக்கு கொடுத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மூன்று தீயணைப்பு வாகனம் மற்றும் லாரி தண்ணீர் மூலம் மூலம் அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

இதற்கிடையில், கட்டிடத்தின் உள்ளே இருந்ததாக கூறப்படும் இரண்டு சிலிண்டர்கள் வெடித்து சிதறியதால், அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் பதற்றமடைந்து ஓட்டம் பிடித்தனர்.

பின்னர் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின்னர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஓட்டு கட்டிடம் என்பதால் உள்ளே இருந்த பஞ்சுகள், துணிகள் கட்டடத்தின் சுவர் அனைத்தும் சேதமானது.
இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தீ விபத்திற்கான காரணம் மற்றும் சேத விவரங்கள் குறித்து போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!