Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கரூரில் சாலை அமைக்கும் பணி… ஜேசிபி-ஐ சிறைபிடித்த பொதுமக்கள்..

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட தான்தோன்றிமலை பகுதியில் உள்ள காமராஜர் நகர் 1வது மற்றும் 2வது தெருக்களில் தார்சாலை அமைப்பதற்காக வந்த ஜேசிபி இயந்திரத்தை அப்பகுதி பொதுமக்கள் சிறை பிடித்தனர். பல ஆண்டுகளாக பகுதியில் கழிவுநீர் வடிகால் இல்லாமல் இருக்கும் நிலையில் சாலை அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து பகுதியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து அப்பகுதிக்கு வந்த மாநகராட்சி அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது அதிகாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அந்த பகுதியில் கழிவுநீர் வடிகால் அமைக்காமல் சாலை அமைக்க வேண்டாம் என பொதுமக்கள்

அதிகாரிகளிடம் கூறினர். சாக்கடை அமைக்காததால் பல ஆண்டுகளாக சிரமங்கலுக்கு ஆளாகி வருவதாகவும், குழந்தைகளுக்கு டெங்கு காய்ச்சல் உள்ளிட்ட நோய்த்தொற்று உபாதைகள் ஏற்படுகின்றன என்று புகார் தெரிவித்தனர். வடிகால் அமைக்காவிட்டால் வரும் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிப்போம் எனவும், வாக்கு கேட்டு யாரும் வர வேண்டாம் என்று கூறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!