Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கரூர் சித்தி விநாயகர் ஆலய பாலமுருகனுக்கு சிறப்பு அபிஷேகம் ..

 

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தேர் வீதி பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலய பாலமுருகனுக்கு ஆனி மாத கிருத்திகை முன்னிட்டு சுவாமிக்கு எண்ணெய் காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், அபிஷேகப்பொடி, அரிசி மாவு,

பன்னீர் உள்ளிட்ட வாசனையை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

அதை தொடர்ந்து பாலமுருகனுக்கு பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அணிவித்த பிறகு சந்தன காப்பு அலங்காரம் நடைபெற்றது.

 

பின்னர் ஆலயத்தின் சிவாச்சாரியார் உதிரிப்பூக்களால் சுவாமிக்கு நாமாவளிகள் கூறிய பிறகு தூப தீபங்கள் காட்டப்பட்டு, நெய் வைத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு, பஞ்ச கற்பூர ஆலாத்தியுடன் மகா தீபாராதனை நடைபெற்றது.

கரூர் தேர் வீதி விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் நடைபெற்ற ஆனி மாத கிருத்திகை பூஜையில் காண ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

error: Content is protected !!