Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கரூர் ஸ்ரீ வாராஹி அம்மன் கோவிலில் சிறப்பு பொருட்களால் அபிஷேகம்…

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட உழவர் சந்தை அருகே குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ வாராஹி அம்மன் ஆலயத்தில் ஆடி மாத பௌர்ணமியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

நிகழ்ச்சியை முன்னிட்டு வாராஹி அம்மனுக்கு என்னைக்காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், விபூதி, குங்குமம்

உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

அதைத் தொடர்ந்து ஆலயத்தின் சிவாச்சாரியார் வாராஹி அம்மனுக்கு பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அணிவித்த பிறகு சுவாமிக்கு தூப தீபங்கள் காட்டப்பட்டு, நெய்வேத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு, பஞ்ச கற்பூர ஆலாத்தியுடன் மகா தீபாராதனை நடைபெற்றது.

கரூர் உழவர் சந்தை அருள்மிகு ஸ்ரீ வாராஹி அம்மன் ஆலயத்தில் நடைபெற்ற ஆடி மாத பௌர்ணமி பூஜையை காண ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!