Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கரூர் ஸ்ரீ பாலசுப்பிரமணியசுவாமி கோவிலில் கந்த சஷ்டி 4ம் நாள் சுவாமி புறப்பாடு…

கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு பல்வேறு முருகன் ஆலயங்களில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில் கரூர் வெண்ணமலை அருள்மிகு ஸ்ரீ பாலசுப்பிரமணியசுவாமி ஆலயத்தில் கந்த சஷ்டி விழா இந்த ஆண்டு சிறப்பாக நடைபெற்று வருகிறது.

இதன் ஒரு பகுதியாக இன்று நான்காம் நாள் சுப்பிரமணியர் புறப்பாடு சிறப்பாக நடைபெற்றது.

ஆலய மண்டபத்தில் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த அருள்மிகு ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமிக்கு மகா

தீபாராதனை நடைபெற்று, அத தொடர்ச்சியாக பக்தர்கள் பாலசுப்ரமணிய சுவாமி சிறப்பு ரத வாகனத்தில் கொழுவிருக்க செய்தனர்.

அதைத்தொடர்ந்து மேள தாளங்கள் முழங்க ஆலயத்தில் இருந்து புறப்பட்ட சுவாமியின் திருவீதி விழா ஆலய முக்கிய வீதியில் வழியாக வலம் வந்த பிறகு மீண்டும் ஆலயம் குடிபுகுந்தது.

கரூர் வெண்ணமலை அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கந்த சஷ்டி நான்காம் நாள் திருவீதி உலாவை காண ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலய வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!