Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கரூர் ஸ்ரீ கற்பக விநாயகர் கோவிலில் சிறப்பு பொருட்களால் அபிஷேகம்….

ஐப்பசி மாத பஞ்சமி திதியை முன்னிட்டு பல்வேறு வாராஹி அம்மன் ஆலயங்களில் இன்று சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நிகழ்ச்சி நடைபெற்று வரும் நிலையில் கரூர் மாநகராட்சிக்குட்பட்ட மினி பேருந்து நிலையம் அருகே உள்ள அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ வாராஹி அம்மனுக்கு ஐப்பசி மாத பஞ்சமி திதியை முன்னிட்டு சுவாமிக்கு எண்ணெய் காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், அபிஷேக பொடி, அரிசி மாவு,பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று அதன் தொடர்ச்சியாக வாராஹி அம்மனுக்கு பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அணிவித்த பிறகு சந்தன காப்பு அலங்காரம் நடைபெற்றது.

தொடர்ந்து ஆலயத்தின் சிவாச்சாரியார் உதிரி பூக்களால் நாமாவளிக்க கூடிய பிறகு சுவாமிக்கு தூப தீபங்கள் காட்டப்பட்டு, நெய்வேத்தியம்

சமர்ப்பிக்கப்பட்டு,பஞ்ச கற்பூர ஆலாத்துடன் மகா தீபாராதனை நடைபெற்றது.

கரூர் மினி பேருந்து நிலையம் அருகே உள்ள அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் வீற்றிருக்கும் வாராஹி அம்மனுக்கு நடைபெற்ற ஐப்பசி மாத பஞ்சமி திதி சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார நிகழ்ச்சியை காண ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!