Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கரூர்-ஸ்ரீபகவதி அம்மன் கோவிலில் அக்னி சட்டி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

கரூர் அருகே ஸ்ரீ பகவதி அம்மன் ஆலய சித்திரை திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் பால்குடம், அக்னி சட்டி எடுத்து நேர்த்திக் கடன் செலுத்தினர். கரூர் மாநகராட்சிக்குட்பட்ட ராயனூர் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பகவதி அம்மன் ஆலயத்தில் சித்திரை மாத திருவிழாவில் முன்னிட்டு நாள்தோறும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இன்று முக்கிய நிகழ்வாக ஏராளமான பெண் பக்தர்கள் ஆலயம் அருகே அமைந்துள்ள கிணற்றிலிருந்து அக்னி சட்டி, பால்குடம், தீர்த்தக்குடம் எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.நிகழ்ச்சியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் வண்ண சீருடை அணிந்து, கோவில் கிணற்றிற்கு வந்தடைந்த பிறகு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து அக்னிச்சட்டி, பால்குடம், தீர்த்த குடத்தினை தலையில் சுமந்தவாறு பக்தர்கள் ஊர்வலமாக கோவிலிலை சுற்றி வலம் வந்தனர். அதன் பின்னர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்
error: Content is protected !!