Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கரூர் ஸ்ரீ வாராகி அம்மன் கோவிலில் நவராத்திரி 4ம் நாள் சிறப்பு அபிஷேகம்….

நவராத்திரி முன்னிட்டு பல்வேறு அம்மன் ஆலயங்களின் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில் கரூர் மாநகராட்சிக்குட்பட்ட உழவர் சந்தை பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ வாராகி அம்மன் ஆலயத்தில் நவராத்திரி நான்காம் நாளை முன்னிட்டு சுவாமிக்கு எண்ணெய் காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய்,இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், அபிஷேக பொடி, அரிசி மாவு, குங்குமம், விபூதி, பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

அதன் தொடர்ச்சியாக பூஜிக்கப்பட்ட புனித தீர்த்தத்தால் வாராகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்ற பிறகு கோமாதா பூஜையும் நடைபெற்றது. பின்னர் வாராகி அம்மனுக்கு பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அணிவித்த

பிறகு ஆலயத்தின் சிவாச்சாரியார் சுவாமிக்கு தூப தீபங்கள் காட்டி தொடர்ச்சியாக பஞ்ச கற்பூர ஆலாத்தியுடன் மகா தீபாராதனை காட்டினார்.

கரூர் உழவர் சந்தை அருள்மிகு வாராகி அம்மன் ஆலயத்தில் நடைபெற்ற நவராத்திரி நான்காம் நாள் சிறப்பு அலங்கார, அபிஷேக நிகழ்ச்சியை காண ஏராளமான பக்தர்கள் ஆலய வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!