Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கரூர் நெரிசல் பலி: சி.பி.ஐ. விசாரணைக்காக நாளை டெல்லி செல்கிறார் விஜய்

மேற்கொண்ட பிரசாரத்தின்போது ஏற்பட்ட பயங்கர கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்தச் சம்பவம் குறித்து, உச்ச நீதிமன்ற மேற்பார்வையில் சி.பி.ஐ. அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த வழக்கு தொடர்பாக ஏற்கனவே அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார் மற்றும் கரூர் மாவட்ட நிர்வாகிகள் ஆகியோரிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்தி ஆதாரங்களைத் திரட்டியுள்ளது. அதன் தொடர்ச்சியாக, கட்சியின் தலைவர் விஜய்க்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பியிருந்தது. அதன்படி, நாளை (ஜனவரி 12) டெல்லியில் உள்ள சி.பி.ஐ. தலைமை அலுவலகத்தில் விஜய் ஆஜராக உள்ளார்.

இதற்காக நாளை காலை சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் அவர் டெல்லி செல்கிறார். டெல்லி லோதி எஸ்டேட் சாலையில் உள்ள அலுவலகத்தில் அவரிடம் கரூர் சம்பவம் குறித்துப் பல்வேறு கிடுக்கிப்பிடி கேள்விகள் கேட்கப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விசாரணை மூன்று நாட்கள் வரை நீடிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

விஜய்யின் வருகையையொட்டி டெல்லியில் உரிய பாதுகாப்பு வழங்கக் கோரி த.வெ.க. சார்பில் டெல்லி காவல்துறைக்கு மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்தச் சூழலில், விஜய்யின் டெல்லி பயணம் தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளது.

error: Content is protected !!