Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கரூர், தான்தோன்றிமலை புரட்டாசி திருவிழா…. தேரை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்…

கரூர், தான்தோன்றிமலையில் தென்திருப்பதி என்று அழைக்கப்படும் அருள்மிகு வெங்கட்ரமண சுவாமி கோயில் அமைந்துள்ளது. அங்கு ஆண்டுதோறும் புரட்டாசி திருவிழா விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.

இவ்வாண்டு திருவிழாவானது கடந்த 15-ஆம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. புரட்டாசி பெருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில், பெருமாள் துணைவியாருடன் எழுந்தருளினார். மக்கள் கோவிந்தா… கோவிந்தா… என பக்த முழக்கத்துடன் திருத்தேரை

வடம் பிடித்து இழுந்தனர். திருத்தேர் 4 மாட வீதிகளிலும் வலம் வந்து நிலையை அடைந்தது. அங்கு வீற்றிருந்தவாறு தொடர்ந்து பக்தர்களுக்கு பெருமாள் சேவை சாதித்தார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். புரட்டாசி தேரோட்டத்தில் கலந்து கொண்ட மக்களுக்கு மலை வீதியை சுற்றியுள்ள திருமண மண்டபங்களில் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.

பொதுமக்கள் கூட்டம் அலைமோதி வருவதால் முக்கிய சாலைகளில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!