Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கரூர் திருமாலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்.. பக்தர்கள் தரிசனம்

கரூர் மாநகராட்சிக்கு திருமாநிலையூர் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு சௌந்தர்யநாயகி ஸமேத ஸ்ரீ திருமாலீஸ்வரர் ஆலயத்தில் அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சியாக நடைபெற்றது. முன்னதாக ஆலயம் அருகே பிரத்தியேகமாக யாக குண்டங்கள் அமைத்து காவிரி

ஆற்றில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித தீர்த்தத்திற்கு மூன்று கால யாக பூஜை நடைபெற்றது.

அதன் தொடர்ச்சியாக புனித தீர்த்தத்திற்கு தூப தீபங்கள் காண்பிக்கப்பட்ட பின்னர் மேல தாளங்கள் முழங்க சிவாச்சாரியார் கலசத்தினை தலையில் சுமந்தவாறு கோவிலை சுற்றி வளம் வந்த பின்னர் கோபுர கலசத்தை வந்தடைந்தது.

அதனைத் தொடர்ந்து கோபுர கலசத்திற்கு பட்டாடை உடுத்தி வண்ண மாலைகள் அணிவித்து புனித தீர்த்தத்தால் அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சியாக நடைபெற்றது‌.

அதனைத் தொடர்ந்து பொதுமக்கள் மீது புனித திருத்தம் தெளிக்கப்பட்டது. கரூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான ஆன்மீக பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர் பின்னர் பொதுமக்கள் அனைவருக்கும் பிரசாதமாக அன்னதானம் வழங்கப்பட்டது.

error: Content is protected !!