Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மோசடி, ஆள் கடத்தல்.. விஜயபாஸ்கரை கஸ்டடி எடுக்கும் சிபிசிஐடி..

100 கோடி ரூபாய் நில மோசடி வழக்கில் முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் சிபிசிஐடி போலீசாரால்  கைது செய்யப்பட்டு தற்போது திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில்  ஜாமீன் கேட்டு கரூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் விஜயபாஸ்கர் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீது இன்று விசாரணை நடைபெறவுள்ளது. இந்த நிலையில் 100 நில மோசடி வழக்கு மற்றும் ஆட்கடத்தல், கொலை மிரட்டல் வழக்கு ஆகியவை விஜயபாஸ்கர் மீது போடப்பட்டுள்ள நிலையில் முதலாவதாக மோசடி வழக்கில் விஜயபாஸ்கரை  கஸ்டடி எடுக்க சிபிசிஐடி போலீசார் முடிவு செய்துள்ளார். இதற்காக இன்று விஜயபாஸ்கர் கரூர் கோர்ட்டிற்கு அழைத்து வரப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!