Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

3 மாதம் டிமிக்கி…. சிபிசிஐடியிடம் சிக்கிய எம்ஆர்விஜயபாஸ்கரின் தம்பி

கரூரில் பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான 100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை சட்டவிரோதமாக பத்திரப்பதிவு செய்த வழக்கில் முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் சகோதரர் சேகர் மற்றும் செல்வராஜ் ஆகிய இருவரை இன்று கரூரில் சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்த வழக்கில் ஏற்கனவே முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் கைது செய்யப்பட்டு 15 நாட்கள் நீதிமன்ற காவலில் திருச்சி மத்திய சிறையில் இருந்து, தற்போது நிபந்தனை ஜாமினில் வெளிவந்துள்ளார் என்பது

குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் எம் ஆர் விஜயபாஸ்கரின் சகோதரர் சேகர் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமின் கேட்டு தாக்கல் செய்த மனு கடந்த 3 நாட்களுக்கு முன்பு தள்ளுபடி செய்யப்பட்டது.

வழக்கு தொடர்பாக முகாந்திரம் இருப்பின் இவர்களை கைது செய்யலாம் என சென்னை உயர்நீதிமன்றம் கூறி இருந்தது.

இந்த நிலையில் இன்று கரூரில் தலைமறைவாக இருந்த முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜய பாஸ்கரின் தம்பி  சேகர் மற்றும் தோட்டக்குறிச்சி செல்வராஜ் ஆகிய இருவரையும் சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.இதனால் அதிமுகவினர் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இவர்கைள கடந்த 3 மாதமாக போலீசார் கைது செய்ய தேடிவந்த நிலையில் இப்போது அவர்கள்  போலீசில் சிக்கி உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!