Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கேரவன் விவகாரம்……புகார் தர விரும்பவில்லை…. புலனாய்வு குழுவிடம் ராதிகா தகவல்

மலையாள திரையுலகில் நடிகைகள் பாலியல் தொல்லைக்கு ஆளாவதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இதுகுறித்து விசாரிப்பதற்கு ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த கமிட்டியின் அறிக்கையை கேரள அரசு கடந்த வாரம் வெளியிட்டது.

அதில், நடிகைகளுக்கும், பெண் கலைஞர்களுக்கும் பாலியல் தொல்லை இருப்பதாகவும் இதனை தொடர்ந்து நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்களுக்கு எதிராக பாலியல் புகார்கள் அடுத்தடுத்து வந்தவண்ணம் உள்ளன. இது தொடர்பாக, கடந்த சில தினங்களுக்கு முன்பு கேரவனில் பெண்கள் உடைமாற்றுவதை படம் பிடிக்க ரகசிய கேமரா பொருத்தப்பட்டிருந்ததை தான் பார்த்ததாக நடிகை ராதிகா பேட்டியளித்திருந்தார்.

இந்த நிலையில், கேரள அரசால் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு புலனாய்வு குழு தொலைபேசி வாயிலாக நடிகை ராதிகாவிடம் விசாரணை நடத்தியது. அந்த விசாரணையில், எந்த படப்பிடிப்பின்போது கேரவனில் கேமரா வைத்த சம்பவம் குறித்து தெரிய வந்தது என ராதிகாவிடம் குழு கேட்டறிந்தது . இதற்கு பதிலளித்த நடிகை ராதிகா யார் மீதும் புகார் கொடுக்க விரும்பவில்லை என்று சிறப்பு புலனாய்வு குழு விசாரணையில் தகவல் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!