Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கொள்ளிடம் கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு – வீணாகும் பல்லாயிரம் லிட்டர் குடிநீர்…

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே பளூரில் உள்ள கொள்ளிடம் ச. கண்ணனூர் பேரூராட்சி கூட்டுக் குடிநீர் குழாயில் உடைப்பு. பல்லாயிரம் லிட்டர் குடிநீர் வீணாக வெளியேறுகிறது.

நம்பர் 1 டோல்கேட்டில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்திலிருந்து ஆழ்துளை கிணறு அமைத்து பொதுமக்களின்
குடிநீர் தேவைக்காக பிச்சாண்டார்கோயில்,பளூர், பணமங்கலம், கூத்தூர்,ச.கண்ணனூர் பேரூராட்சி உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்களுக்கு தினமும் லட்சக்கணக்கான லிட்டர் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் சமயபுரம் அருகே திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பளூர்

பகுதியில் கொள்ளிடம் ச. கண்ணனூர் பேரூராட்சி கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது.இந்த குழாயில் இருந்து பல்லாயிரம் கணக்கான லிட்டர் குடிநீர் வீணாக வெளியே செல்கிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குடிநீர் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சரி செய்து வீணாகும் குடிநீரை தடுத்து நிறுத்த வேண்டுமென அப்பகுதி மக்கள் கூறி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!