Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தேசிய ஊட்டச்சத்து மாதம்… கோவையில் அங்கன்வாடி ஊழியர்கள் பேரணி…

கோவை தேசிய ஊட்டச்சத்து மாதத்தை முன்னிட்டு கோவையில் அங்கன்வாடி ஊழியர்கள் பேரணி மேற்கொண்டனர். செப்டம்பர் மாதம் தேசிய ஊட்டச்சத்து மாதமாக கடைபிடிக்கப்படுவதை முன்னிட்டு இந்த மாதம் முழுவதும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்ட நிர்வாகத்தால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மாவட்டம் தோறும் உள்ள அங்கன்வாடி பணியாளர்கள் அந்தந்தப் பகுதிகளில் ஊட்டச்சத்து மாதம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அதன் தொடர்ச்சியக இன்று கோவை மாவட்ட

ஆட்சியர் அலுவலகத்தில் “ஊட்டச்சத்து மிக்க பாரதம், எழுத்தறிவு பெற்ற பாரதம், வலிமையான பாரதம்” என்பதை வலியுறுத்தும் வகையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணியை கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார் துவக்கி வைத்தார்.

இந்த பேரணியில் ஊட்டச்சத்து மாதத்தை குறிப்பிடும் வகையிலும், பிறந்த குழந்தைகள் கர்ப்பிணி பெண்கள் தாய்மார்கள் ஊட்டச்சத்து குறித்து தெரிந்து கொள்ளும் வகையிலும் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி அங்கன்வாடி ஊழியர்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் பேரணி மேற்கொண்டனர் எதிர் செயலர் காய்கறிகளை மழையாக அணிந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!