Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கிருஷ்ணராயபுரம் திமுக வேட்பாளர் சாதனை திட்டங்களை கூறி வாக்கு சேகரிப்பு

இறுதி நாள் பிரச்சாரம்: கிருஷ்ணராயபுரம் (தனி) சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ராஜா சாதனை திட்டங்களை கூறி பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பு.

தமிழக சட்டமன்ற தேர்தல் வருகின்ற 23ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் இன்று இறுதி பிரச்சார நாளை ஒட்டி பல்வேறு கட்சி வேட்பாளர்கள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தநிலையில் கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற (தனி) தொகுதியில் மதச்சார்பற்ற

முற்போக்கு கூட்டணியின் சார்பில் திமுக வேட்பாளராக போட்டியிடும் சி.கே ராஜா, உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

இன்று கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காந்திகிராமம், புலியூர் கடைவீதி, மாயனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்களை சந்தித்து ஐந்து ஆண்டுகளில் செயல்படுத்தப்பட்ட சாதனை திட்டங்கள் தற்போது ஆட்சி அமைந்தால் செயல்படுத்தப்படும் சிறப்பு திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் கூறி உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திமுக வேட்பாளரை உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்.

error: Content is protected !!