Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கடலை தோட்டத்தில் விவசாயிகளிடம் கிருஷ்ணராயபுரம் திமுக வேட்பாளர் வாக்குசேகரிப்பு

மூக்கணாங்குறிச்சியில் கடலை தோட்டத்தில் அறுவடை செய்து விவசாயிகளிடம் வாக்கு சேகரித்த கிருஷ்ணராயபுரம் திமுக வேட்பாளர் ராஜா.

தமிழகத்தில் வருகிற 23ஆம் தேதி நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் (தனி) சட்டமன்றத் தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் திமுக வேட்பாளராக போட்டியிடும் ராஜா, தொகுதிக்குட்பட்ட மூக்கணாங்குறிச்சி ஊராட்சியில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

மூக்கணாங்குறிச்சி பகுதியில் உள்ள விஜயபுரம், தொட்டியம்பட்டி, எம்ஜிஆர் குடியிருப்பு, கன்னிமார்பட்டி, கந்தசாரப்பட்டி, வால்காட்டுப்புதூர் உள்ளிட்ட கிராமங்களுக்கு சென்று

பொதுமக்களை நேரில் சந்தித்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

அப்போது, பிரச்சாரத்திற்கு சென்ற பொழுது அப்பகுதியில் கடலை விவசாயம் செய்து வந்த விவசாயிகளை அவர்களது தோட்டங்களில் நேரில் சந்தித்த ராஜா, அவர்களுடன் சேர்ந்து கடலை அறுவடை செய்து உதவினார். தொடர்ந்து, திமுக ஆட்சிக்காலத்தில் விவசாயிகளுக்காக கொண்டு

வரப்பட்ட பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து விளக்கமளித்தார். மேலும், நெல் கொள்முதல் விலையை குவிண்டாலுக்கு ரூ.3500 ஆக உயர்த்தியமை உள்ளிட்ட விவசாய நல நடவடிக்கைகள்

பற்றி எடுத்துரைத்து, வரவிருக்கும் தேர்தலில் உதயசூரியன் சின்னத்திற்கு ஆதரவு தருமாறு கேட்டுக் கொண்டார்.

error: Content is protected !!