கிருஷ்ணராயபுரம் திமுக வேட்பாளர் ராஜா இருசக்கர வாகனத்தில் சென்று பொதுமக்களிடம் உதய சூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற (தனி) தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் ராஜா இன்று கடவூர் தெற்கு ஒன்றியம் ஊராட்சிக்குட்பட்ட சரக்கம்பட்டி , வீரணம் பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு திமுக வேட்பாளர் ராஜா இருசக்கர வாகனத்தில் சென்று உதயசூரியன் சின்னத்திற்கு பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சியினர் பட்டாசு வெடித்து, சால்வை அணிவித்து வரவேற்றனர். அப்பகுதியைச் சார்ந்த ஏராளமான பொது மக்கள் திமுக வேட்பாளரை ஆரத்தி எடுத்து பூக்கள் தூவி வரவேற்பு அளித்தனர்.
