கடவூர் ஒன்றிய பகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட திமுக வேட்பாளருக்கு ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்த பெண்கள்
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதியின் திமுக சார்பில் வேட்பாளராக சி.கே ராஜா போட்டியிடுகிறார்.
தனது தொகுதிக்குட்பட்ட பல்வேறு கிராமங்களுக்கு திறந்த வெளி வேனில் சென்று பொதுமக்களிடையே வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
கடவூர் ஒன்றியத்திற்குட்பட்ட ஆதனூர் ஊராட்சிக்குட்பட்ட எருதிகோன்பட்டி, சேர்வைகாரனூர், சென்னம்பட்டி, பால்மடைப்பட்டி, செங்காட்டனூர், மாவத்தூர் ஊராட்சிக்குட்பட்ட மவத்தூர், கழுத்தரிக்கப்பட்டி, கோடங்கிப்பட்டி, காமநாயக்கனூர் ஆகிய பகுதிகளில் திமுக அரசின் ஐந்தாண்டு சாதனைகளை எடுத்துக் கூறியும் கிருஷ்ணராயபுரம் தொகுதியில் 900 கோடி ரூபாய் அளவிற்கு செய்யப்பட்ட வளர்ச்சி திட்ட பணிகள் குறித்தும், கடவூர் பகுதியில் சிப்காட் தொழிற்சாலை அமைய உள்ளது அதன் மூலம் 10000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று கூறியும், 2026 ஆம் ஆண்டு தேர்தல் வாக்குறுதிகளை எடுத்துக் கூறியும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
மேலும் பெண்கள் ஆரத்தி எடுத்தும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
