கரூர் மாவட்டம், குளித்தலை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஒன்றிய, நகர, பேரூர் கழகச் செயலாளர்கள் மற்றும் மண்டல பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு செந்தில் பாலாஜி தலைமை வகித்தார்.
குளித்தலை சட்டமன்றத் தொகுதியின் திமுக வேட்பாளர் அ. சந்திரன் (சூரியனூர்) கலந்து கொண்டு தேர்தல் பணிகள் குறித்து விரிவாக பேசினார். வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, வாக்குச்சாவடி வாரியாக பொறுப்பாளர்கள் நியமனம், வீடு தோறும் வாக்கு சேகரிப்பு, கூட்டணி

கட்சிகளுடன் ஒருங்கிணைப்பு, இளைஞர் மற்றும் பெண்கள் அணியின் செயல்பாடு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
கூட்டத்தில் கலந்து கொண்ட நிர்வாகிகளுக்கு தேர்தல் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. ஒவ்வொரு பகுதியில் வாக்காளர்களை நேரடியாக சந்தித்து அரசின்

சாதனைகள் மற்றும் கட்சியின் தேர்தல் அறிக்கையை எடுத்துரைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகள் மற்றும் மண்டல பொறுப்பாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

