Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

குளித்தலையில் புதிய அரசு பஸ்சை எம்எல்ஏ தொடங்கி வைத்தார்…

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே அய்யர் மலையில் டாக்டர் கலைஞர் பொன்விழா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் குளித்தலை மற்றும் சுற்றுவட்டார பகுதியில்

சேர்ந்த சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.

குளித்தலையில் இருந்து கல்லூரி வரை தனி பேருந்து இயக்க வேண்டுமென கல்லூரி மாணவ, மாணவிகள், சமூக ஆர்வலர்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்துள்ளனர்.

அதனை ஏற்று குளித்தலையில் இருந்து அய்யர்மலை அரசு கலைக்கல்லூரி வரை புதிய வழித்தட பேருந்தினை குளித்தலை எம்எல்ஏ மாணிக்கம் இன்று கொடியசைத்து துவக்கி வைத்தார்.

அய்யர்மலை அரசு கலைக்கல்லூரி வரை செல்லக்கூடிய புதிய அரசு பேருந்தில் மாணவ, மாணவிகள் உற்சாகத்துடன் ஏறி பயணம் செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!