Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கும்பகோணத்தில் தேசிய மாணவர் படை சி சான்றிதழ் தேர்வு…

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அரசினர் கலைக் கல்லூரி தன்னாட்சியில் தேசிய மாணவர் படை மாணவர்களுக்கான ஆண்டு இறுதித் தேர்வான சி சான்றிதழ் தேர்வில் செய்முறைத் தேர்வும், மறுநாள் எழுத்துத் தேர்வும் நடந்தது.

தேர்வுக்கு 2வது தமிழ்நாடு பெட்டாலியன் என். சி. சி காமாண்டிங் அதிகாரி கர்னல் அருண்குமார் தலைமை வகித்தார். இதில் 8வது தமிழ்நாடு பெட்டாலியனிலுள்ள தஞ்சாவூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களை சார்ந்த 13 கல்லூரிகளிலிருந்து 282 மாணவ மாணவிகளும் மற்றும் தஞ்சாவூரிலுள்ள 34வது தமிழ்நாடு பெட்டாலியன் என். சி. சி-ஐ சார்ந்த 70 மாணவ மாணவிகளும் கலந்து கொண்டனர்.

ஏற்பாடுகளை கும்பகோணம் அரசினர் கலைக் கல்லூரி முதல்வர் முனைவர் அ. மாதவி அனுமதியுடன் தேசிய மாணவர் படை அதிகாரி லெப்டினன்ட் முனைவர் அ. எட்வர்ட் சாமுவேல் செய்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!